சமையலறை

குதிரைவாலி கொழுக்கட்டை

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

குதிரைவாலி அரிசி - 1 கப்

எண்ணெய் 2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

பூரணம் தயாரிக்க

கடலைப் பருப்பு, வெல்லம் தலா அரை கப்

தேங்காய்த் துருவல் அரை கப்

பாதாம் பருப்புத் துருவல், முந்திரித் துருவல் - 2 டீஸ்பூன்

வெள்ளரி விதை (பொடித்தது) 1 டீஸ்பூன்

ஏலக்காய்த் தூள்- சிறிதளவு

நெய் தேவையான அளவு

எப்படிச் செய்வது?

குதிரைவாலி அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு நீரை வடித்துவிட்டு, நிழலில் உலர்த்தவும். நன்றாக உலர்ந்ததும் மாவாக அரைத்து, சலிக்கவும். ஒன்றறை கப் தண்ணீருடன் சிறிதளவு உப்பு, எண்ணெய் சேர்த்துக் கொதிக்கவைக்கவும். பின் தீயைக் குறைத்து மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து, கட்டியில்லாமல் கிளறி இறக்கவும். ஆறியதும் கையில் எண்ணெய் தொட்டுக்கொண்டு மாவைப் பிசைந்து சிறிது நேரம் மூடிவைக்கவும். முந்திரி, பாதாம் பருப்புகளை நெய்யில் வறுத்தெடுக்கவும்.

வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சூடாக்கவும். கரைந்ததும் வடிகட்டி, அதில் தேங்காய்த் துருவல், வறுத்த முந்திரி, பாதாம் வெள்ளரி விதை, ஏலக்காய்த் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து சுருள கிளறி இறக்கவும்.

பிசைந்துவைத்துள்ள மாவிலிருந்து சிறிதளவு எடுத்து வட்டமாகத் தட்டி அதன் நடுவே பூரணத்தை வைத்து மடித்து, ஆவியில் வேகவைக்கவும். மாவைக் கொழுக்கட்டை அச்சில் வைத்தும் செய்யலாம்.

SCROLL FOR NEXT