சமையலறை

எரி சேரி

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

சேனைக் கிழங்கு - கால் கிலோ

நேந்திரன் காய் - 2

மிளகுத் தூள் - 15 கிராம்

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

வெல்லம் - 10 கிராம்

தேங்காய் - 2 (அரைக்க - 1, வறுக்க - 1)

உப்பு தேவையான அளவு

தாளிக்க:

உளுந்து - 10 கிராம்

காய்ந்த மிளகாய் - 4

தேங்காய் எண்ணெய் - 100கிராம்

நெய் - 10 கிராம்

சீரகம் - 5 கிராம்

கடுகு - கால் டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

சேனைக் கிழங்கு, நேந்திரன் காய், உப்பு, மஞ்சள் தூள் இவற்றுடன் சிறிது தண்ணீர் சேர்த்து, வேகவையுங்கள். ஒரு தேங்காயுடன் சீரகம் சேர்த்து அரைத்து, கொதிக்கும் கலவையில் ஊற்றுங்கள். இன்னொரு தேங்காயைத் துருவி, சிவப்பாக வறுத்துக்கொள்ளுங்கள்.

கொதிக்கும் கலவையுடன் இதைச் சேர்த்துக் கொதிக்க விடுங்கள். நெய்யில் கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, குழம்புடன் கலந்து இறக்கிவையுங்கள்.

SCROLL FOR NEXT