சமையலறை

முருங்கைக் கீரை கொழுக்கட்டை

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

வறுத்த கேழ்வரகு மாவு - 1 கப்

ஊறிய பாசிப்பருப்பு - கால் கப்

முருங்கைக் கீரை - முக்கால் கப்

தேங்காய்த் துருவல் - கால் கப்

தண்ணீர் - 1 கப்

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

கடுகு, உளுந்து, ஊற வைத்த கடலைப் பருப்பு - தலா 1 டீஸ்பூன்

வேர்க்கடலை - 1 டேபிள் ஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 3

பெருங்காயத் தூள் - கால் டீஸ்பூன்

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

எப்படிச் செய்வது?

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை என்று வரிசையாகப் போடவும். பொரிந்ததும் உதிர்த்து வைத்திருக்கும் மாவு கலவையைச் சேர்த்துக் கிளறவும். இரண்டு நிமிடங்கள் கிளறியதும் வேகவைத்த கொழுக்கட்டைகளைச் சேர்த்துக் கிளறவும்.

தீயைக் குறைத்து வைத்து வாணலியை மூடிவைக்கவும். இடையிடையே திறந்து கிளறி விட்டு, ஐந்து நிமிடம் கழித்து இறக்கிவிடவும். இந்தப் பருப்பு உசிலி அம்மிணிக் கொழுக்கட்டையைக் குழந்தைகள் மிகவும் விரும்பிச் சாப்பிடுவர்.

அரைத்த பருப்புக் கலவையையும், உருட்டிய கொழுக்கட்டைகளையும் ஒரே சமயத்தில் வேகவைத்தால் ஒரே நேரத்தில் இரண்டு வெந்துவிடும்.

SCROLL FOR NEXT