என்னென்ன தேவை?
பன் - 2
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
ஸ்டஃப்பிங் செய்ய:
கத்திரிக்காய் - 2
வெங்காயம், தக்காளி - தலா 1
வேகவைத்த கொண்டைக்கடலை - 4 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
நறுக்கிய மல்லி தழை - சிறிதளவு
எப்படிச் செய்வது?
அடி கனமான வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், தக்காளியைச் சேர்த்து வதக்கவும். பொடியாக நறுக்கிய கத்தரிக்காயையும் அதனுடன் சேர்த்து வதக்கி, உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து ஐந்து நிமிடம் மூடிவைக்கவும். தண்ணீர் ஊற்றத் தேவையில்லை. தக்காளியில் உள்ள தண்ணீரே போதும்.
வெந்ததும் மல்லித்தழை தூவி இறக்கவும். பன் நடுவே வெட்டி, இரண்டு துண்டுகளாக்கவும். தவாவில் லேசாக வெண்ணெய் தடவிப் பன்னை வைக்கவும். அதன் மேலே மசாலா தடவி, இன்னொரு பன் துண்டு வைத்து மூடவும். மசாலா வெளியே வந்துவிடாதவாறு கவனத்துடன் திருப்பிப்போட்டு எடுக்கவும்.
தொகுப்பு: ப்ரதிமா