சமையலறை

சுகியன்

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

மேல் மாவுக்கு:

பச்சரிசி - ஒரு கப்

உளுந்து - ஒரு டேபிள் ஸ்பூன்

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

பூரணம் செய்ய:

பொட்டுக்கடலை பொடி, தேங்காய்த் துருவல் - தலா அரை கப்

பொடித்த வெல்லம் - முக்கால் கப்

ஏலக்காய்த் தூள் - அரை டீஸ்பூன்

நெய் - ஒரு டேபிள் ஸ்பூன்

எப்படிச் செய்வது?

முதலில் பச்சரிசி, உளுந்து இரண்டையும் தண்ணீர் விட்டு ஊறவைத்து மையாக அரைத்துக்கொள்ளுங்கள். இதனுடன் சிறிது உப்பு சேர்த்துக் கலந்து வைத்துக்கொள்ளுங்கள்.

வாணலியில் நெய் விட்டு, காய்ந்ததும் தேங்காய்த் துருவல், பொடித்த வெல்லம் போட்டுக் கிளறுங்கள். இரண்டும் சேர்ந்து வரும்போது பொட்டுக்கடலை பொடியைத் தூவிக் கிளறி இறக்குங்கள். ஏலக்காய்த் தூள் போட்டுக் கலந்துவையுங்கள். ஆறியதும் பெரிய நெல்லிக்காய் அளவு உருண்டைகளாகப் பிடித்துவையுங்கள்.

வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காயவிடுங்கள். பூரண உருண்டையை, அரைத்து வைத்திருக்கும் மாவில் முக்கியெடுத்து எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள்.

SCROLL FOR NEXT