என்னென்ன தேவை?
பச்சை வேர்க்கடலை -1கப்
மஞ்சள் பொடி - சிட்டிகை
மிளகாய்த் தூள் - 2 டேபிள்ஸ்பூன்
வெல்லம் - பாக்கு அளவு
தேங்காய்த் துருவல் - கால் கப்
புளி - நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளாகய் - 2
கறிவேப்பிலை - 1கொத்து
எப்படிச் செய்வது?
வேர்க்கடலையை உப்பு சேர்த்து வேகவைத்துக்கொள்ளுங்கள். அடி கனமான பாத்திரத்தில் புளியைக் கரைத்து ஊற்றி மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். நன்கு கொதித்ததும் வெந்த வேர்க்கடலை, வெல்லம் சேர்த்து மீண்டும் கொதித்து வரும்போது தேங்காயை அரைத்துச் சேருங்கள். லேசாகக் கொதித்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்துச் சேர்த்து இறக்கிவிடுங்கள்.