சமையலறை

தண்டுக்கீரை பொரியல்

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

தண்டுக் கீரை 2 கட்டு

சீரகம் 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 3

தேங்காய்த் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்

சின்ன வெங்காயம் - 2 கைப்பிடி அளவு

கடுகு, உளுந்து, எண்ணெய் - தாளிக்க

உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

தண்டுக்கீரையை அலசி, நறுக்கிக்கொள்ளவம். சீரகம், பச்சை மிளகாய் இரண்டையும் தண்ணீர் விடாமல் அரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து சேர்த்துத் தாளிக்கவும். வெங்காயத்தைச் சேர்த்து வதக்கிய பிறகு கீரையைச் சேர்த்து வதக்கவும். சிறிதளவு தண்ணீர், உப்பு சேர்த்து வேகவைக்கவும்.

வெந்ததும் அரைத்த கலவை, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும். உதிரியாக வேகவைத்த பாசிப் பருப்பை இதில் சேர்க்கலாம். காய்ந்த மிளகாய், மிளகு, கடலைப் பருப்பு, தேங்காய்த் துருவல் இவற்றை வறுத்துப் பொடித்தும் சேர்க்கலாம்.

SCROLL FOR NEXT