சமையலறை

எம்.எல்.ஏ. பெசரட்டு

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

பச்சைப் பயறு - 2 கப்

பச்சரிசி - 3 டேபிள் ஸ்பூன்

பச்சை மிளகாய் - 2

இஞ்சி - சிறிய துண்டு

சீரகம் - 1 டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

உப்புமா செய்ய:

கடுகு - அரை டீஸ்பூன்

முந்திரித் துண்டுகள் - 2 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 1

உளுந்து, கடலைப் பருப்பு - தலா 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை - 1 கொத்து

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

ஸ்டஃப்பிங் செய்ய:

பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரை கப்

துருவிய கேரட் - 2 டேபிள் ஸ்பூன்

நறுக்கிய மல்லி தழை - 4 டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

பச்சைப் பயறு, அரிசி இரண்டையும் 6 மணி நேரம் ஊறவைத்துப் பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம், உப்பு சேர்த்து அரைக்கவும். அடி கனமான வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டுக் கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, முந்திரி சேர்த்துத் தாளிக்கவும். பிறகு பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கி, ரவையையும் அதிலேயே வறுக்கவும். 1 கப் நீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். இடையிடையே நன்றாகக் கிளறி விடவும். வெந்ததும் கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும். உப்புமா தயார்.

தோசைக் கல்லில் லேசாக எண்ணெய் தேய்த்து அரைத்துவைத்திருக்கும் பெசரட்டு மாவை வட்டமாக ஊற்றி, மேலே வெங்காயம், கேரட் துருவல், மல்லி தழை தூவிக் கரண்டியால் சீராகப் பரப்பவும். அதன் மேல் 3 டீஸ்பூன் உப்புமாவைப் பரப்பவும். ஓரங்களில் சிறிதளவு எண்ணெய் ஊற்றவும். ஒரு புறம் வெந்ததும் மடக்கி மூடிவிடவும். ஆறிய பிறகும் இந்தப் பெசரட்டு சுவையாக இருக்கும்.

தொகுப்பு: ப்ரதிமா

SCROLL FOR NEXT