சமையலறை

சோள ஊத்தப்பம்

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

வெள்ளை சோளம் - 1 கப்

உளுந்து - கால் கப்

சீரகம், வெந்தயம் - தலா கால் டீஸ்பூன்

தக்காளி - 2

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

சோளம், உளுந்து, வெந்தயம் மூன்றையும் கழுவி, நான்கு மணி நேரம் ஊறவையுங்கள். நன்றாக ஊறியதும் அவற்றுடன் தக்காளி, சீரகம், உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள். மாவு ரொம்ப புளிக்க வேண்டாம்.

ஒரு மணி நேரம் கழித்துக் கனமான ஊத்தப்பமாகச் சுட்டு எடுங்கள். தக்காளியை அரைக்காமல் பொடியாக நறுக்கிச் சேர்த்தும் செய்யலாம். தேங்காய்ச் சட்னியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

SCROLL FOR NEXT