என்னென்ன தேவை?
கடலைப் பருப்பு - கால் கிலோ
பூண்டு - 3 பல்
இஞ்சி - சிறிய துண்டு
மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் - அரை கப்
பச்சை மிளகாய் - 3
காய்ந்த மிளகாய் - 5
தனியாத் தூள், கசகசா - தலா 1 டீஸ்பூன்
முந்திரி - 10
சோம்பு, சீரகம் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 3
தக்காளி - 100 கிராம்
கடுகு, உளுந்து - தாளிக்க
பட்டை, கிராம்பு, ஏலம் எல்லாமாகச் சேர்த்துப் பொடித்தது - 1 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
புதினா, மல்லித்தழை - அலங்கரிக்க
எப்படிச் செய்வது?
கடலைப் பருப்பை ஒரு மணிநேரம் ஊறவைத்து அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு, சீரகம், சோம்பு இவற்றைச் சேர்த்து அரைக்க வேண்டும். அடி கனமான வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, அரைத்த பருப்பு விழுதைச் சிறுசிறு உருண்டைகளாகப் போட்டு பொரிக்க வேண்டும்.
மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து சேர்த்துத் தாளிக்க வேண்டும். பிறகு நறுக்கிய வெங்காயம், நசுக்கிய பூண்டு, இஞ்சி, அரிந்த தக்காளி இவற்றை ஒவ்வொன்றாகச் சேர்த்து வதக்க வேண்டும். பச்சை மிளகாய், கசகசா, முந்திரி, தேங்காய் இவற்றை அரைத்துச் சேர்த்து, தனியாப் பொடி, தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட வேண்டும். தேவையான உப்பு, பொடித்த மசாலாப் பொடி சேர்த்து, பொரித்த உருண்டைகளையும் போட்டு கொதித்ததும் இறக்கிவிடுங்கள். புதினா, மல்லித்தழை தூவி, பரிமாறினால் வாசனை ஊரையே இழுக்கும்.