என்னென்ன தேவை?
குதிரைவாலி - 1 கப்
மாம்பழத் துண்டுகள் - கால் கப்
சர்க்கரை - 4 டேபிள் ஸ்பூன்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி - சிறிதளவு
எப்படிச் செய்வது?
வாணலியில் நெய்யைச் சூடாக்கி, முந்திரியை வறுத்து எடுக்கவும். அதிலேயே குதிரைவாலி அரிசியையும் வறுத்து எடுக்கவும். இரண்டரை கப் தண்ணீரைக் கொதிக்கவைத்து, வறுத்த குதிரைவாலி அரிசியை அதில் சேர்த்து, வேகவிடவும். வெந்து வரும் போது சர்க்கரை சேர்க்கவும்.
நன்கு வெந்ததும் மாம்பழத் துண்டுகள் சேர்க்கவும். முந்திரி சேர்த்துக் கிளறி இறக்கினால் சுவையான குதிரைவாலி மாம்பழக் கேசரி தயார். மாம்பழத்துக்குப் பதில் அன்னாசிப் பழம் சேர்த்தும் செய்யலாம்.