என்னென்ன தேவை?
சாமை அரிசி - 1 கப்
கடலைப் பருப்பு - கால் கப்
உளுந்து - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம், சோம்பு, மிளகு - தலா கால் டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
வெங்காயம் - 1
புதினா - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
சாமை அரிசியை ஒரு மணி நேரமும், பருப்பு வகைகளை அரை மணி நேரமும் ஊறவையுங்கள். பிறகு தண்ணீரை வடித்துவிட்டு சீரகம், சோம்பு, மிளகு, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள்.
மாவில் புதினா, நறுக்கிய வெங்காயம் சேர்த்துப் பிசைந்து வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள். விரும்பினால் மாவுடன் கீரை, காய்கறிகளைச் சேர்த்துக்கொள்ளலாம்.