என்னென்ன தேவை?
பனிவரகு - 1 கப்
தக்காளி, வெங்காயம் - தலா 1
கொண்டைக்கடலை - கால் கப்
வெள்ளரிக்காய், கேரட் - தலா 1
உப்பு -தேவையான அளவு
எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
புதினா, மல்லித்தழை - சிறிதளவு.
எப்படிச் செய்வது?
சுத்தம் செய்த பனிவரகுடன் இரண்டரை கப் நீர் சேர்த்து வேகவைக்கவும். கொண்டைக்கடலை அல்லது வெள்ளை தட்டைப்பயற்றை எட்டு மணி நேரம் ஊறவைத்து, பிறகு வேகவைக்கவும். காய்கறிகளை நறுக்கிக்கொள்ளவும். வேகவைத்த பனிவரகு, கொண்டைக்கடலையுடன் நறுக்கிய காய்கறிகளைச் சேர்த்து உப்பு, மிளகுத் தூள் சேர்க்கவும். எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து புதினா, கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.