சமையலறை

சுண்டைக்காய் புட்டு

ப்ரதிமா

என்னென்ன தேவை?

சுண்டைக்காய் - 2 கப்

கடலைப் பருப்பு, துவரம் பருப்பு - தலா 4 டேபிள் ஸ்பூன்

பாசிப் பருப்பு, வேர்க்கடலை - தலா 2 டேபிள் ஸ்பூன்

பெருங்காயம் - அரை டீஸ்பூன்

மல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு

காய்ந்த மிளகாய் - 5

எண்ணெய், உப்பு, புளி - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

சுண்டைக்காயை நசுக்கி, லேசான புளித்த தண்ணீரில் வேகவைத்து வடிக்கவும். பருப்பு வகைகளை ஊறவைத்து உப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்துக் கரகரப்பாக அரைக்கவும். அரைத்த பருப்புடன் சுண்டைக்காயைக் கலந்து ஆவியில் வேக விடவும். வெந்ததும் ஆற வைத்து, உதிர்க்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்துத் தாளிக்கவும். உதிர்த்த புட்டை அதில் சேர்த்துக் கிளறவும். வேர்க்கடலையை வறுத்து ஒன்றிரண்டாகப் பொடித்து அதில் சேர்த்துக் கிளறி, இறக்கவும். இதைச் சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்.

SCROLL FOR NEXT