என்னென்ன தேவை?
சாமை சேவை - 1 பாக்கெட்
நீளவாக்கில் நறுக்கிய கேரட், பீன்ஸ், குடைமிளகாய் - கால் கப்
வெங்காயம் - கால் கப்
இஞ்சி, பூண்டு (நறுக்கியது) |- தலா 1 டீஸ்பூன்
செஷ்வான் சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்
தக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
வெங்காயத் தாள் - சிறிதளவு
எப்படிச் செய்வது?
சாமை சேவையை தண்ணீரில் 5 நிமிடம் ஊறவைத்து, பிறகு வடிகட்டி வைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய பூண்டு, இஞ்சி, வெங்காயம், காய்கறிகள் சேர்த்து வதக்கவும். அதனுடன் செஷ்வான் சாஸ், தக்காளி சாஸ், சோயா சாஸ், தேவையான அளவு உப்பு, சிறிதளவு நீர் சேர்த்து வேகவிடவும். பாதி வெந்ததும், வடிகட்டி வைத்திருக்கும் சாமை சேவையை சேர்த்துக் கிளறி, மூடி வைக்கவும். 5 நிமிடம் கழித்து திறந்து, வெங்காயத் தாள் தூவிப் பரிமாறவும்.