சமையலறை

எள் சாதம்

செய்திப்பிரிவு

எள் சாதம்

என்னென்ன தேவை?

சாமை சாதம் – 1 கப்

உப்பு, நல்லெண்ணெய், நெய் - தேவையான அளவு

வறுத்து அரைக்க:

எள் - 2 டீஸ்பூன்

கடுகு - கால் டீஸ்பூன்

உளுந்து - 1 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 7

தேங்காய்த் துருவல் - 1 டீஸ்பூன்

தாளிக்க

கடுகு - கால் டீஸ்பூன்

உளுந்து, கடலைப் பருப்பு - தலா அரை டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 2

கறிவேப்பிலை - சிறிதளவு

எப்படிச் செய்வது?

வாணலியில் நெய், எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைச் சேர்த்துத் தாளியுங்கள். அரைத்து வைத்துள்ள பொடியைச் சேர்த்துக் கிளறி, அதனுடன் சாதம், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கி வையுங்கள். எள் சாதத்தில் கால்சியமும் இரும்புச் சத்தும் நிறைந்திருக்கின்றன. உடலுக்கு வலிமை தந்து, ரத்தப் பெருக்கை ஏற்படுத்தும். உடலில் தங்கியுள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும்.

ராஜபுஷ்பா

SCROLL FOR NEXT