சமையலறை

நலம் தரும் இஞ்சி: தயிர்ப் பச்சடி

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

பிஞ்சு இஞ்சி - ஒரு விரல் நீளத்துக்கு

தேங்காய்த் துருவல் - கால் மூடி

பச்சை மிளகாய் - 1

தயிர் - ஒரு கப்

மிளகாய்த் தூள் - ஒரு சிட்டிகை

சர்க்கரை, உப்பு - சிறிதளவு தாளிக்க

எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

கடுகு - அரை டீஸ்பூன்

பெருங்காயம் - கால் டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

எப்படிச் செய்வது?

தோல் நீக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல் மூன்றையும் நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். அதனுடன் கடைந்த தயிர், உப்பு, சர்க்கரை ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்குங்கள். தாளிக்கும் கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டுத் தாளித்துச் சேருங்கள். ஒரு சிட்டிகை மிளகாய்த் தூளை மேலே தூவிப் பரிமாறுங்கள்.


- குறிப்பு: லட்சுமி சீனிவாசன் | தொகுப்பு : ப்ரதிமா

SCROLL FOR NEXT