தலையில் சூடிக்கொள்ளவும் இறைவனுக்குப் படைக்கவும் வீட்டை அலங்கரிக்கவும் மட்டுமல்ல பூக்கள். சமையலறையிலும் அவற்றுக்கு இடம் தரலாம் என்கிறார் திருப்பூரைச் சேர்ந்த சுசீலா ராமமூர்த்தி. அவை புதுவிதச் சுவையில் நாவுக்கு விருந்தளிப்பதுடன் நம் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் எனச் சொல்லும் அவர், பூக்களில் செய்யக்கூடிய உணவு வகைகள் சிலவற்றின் செய்முறையை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.
என்னென்ன தேவை?
பரங்கிப்பூ (அரசாணிப்பூ) - 6
கடலை மாவு - 200 கிராம்
மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள்,
சமையல் சோடா - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
எப்படிச் சமைப்பது?
கடலை மாவு, மிளகாய்த் தூள், பெருங்காயத் தூள், உப்பு, ஒரு சிட்டிகை சமையல் சோடா ஆகியவற்றைச் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்குக் கரைத்து, அரை மணி நேரம் அப்படியே வைக்க வேண்டும். பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்தபின், அரசாணிப்பூவை மாவில் தோய்த்துப் போட்டு நன்றாகச் சிவக்கப் பொரித்தெடுங்கள்.