சமையலறை

பூவெல்லாம் சமைத்துப்பார்!- புளியம்பூ துவையல்

செய்திப்பிரிவு

தலையில் சூடிக்கொள்ளவும் இறைவனுக்குப் படைக்கவும் வீட்டை அலங்கரிக்கவும் மட்டுமல்ல பூக்கள். சமையலறையிலும் அவற்றுக்கு இடம் தரலாம் என்கிறார் திருப்பூரைச் சேர்ந்த சுசீலா ராமமூர்த்தி. அவை புதுவிதச் சுவையில் நாவுக்கு விருந்தளிப்பதுடன் நம் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் எனச் சொல்லும் அவர், பூக்களில் செய்யக்கூடிய உணவு வகைகள் சிலவற்றின் செய்முறையை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

என்னென்ன தேவை?

தேங்காய்த் துருவல் - 1 கப்
பொட்டுக் கடலை - 50 கிராம்
காய்ந்த மிளகாய் - 4
புளியம்பூ - 1 கப்
கடுகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

எப்படிச் சமைப்பது?

இந்தத் துவையலின் சுவையே ஆட்டுக்கல்லிலோ அம்மியிலோ அரைப்பதுதான். மிளகாய், தேங்காய், பொட்டுக்கடலை ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக அரைத்த பின்பு கறிவேப்பிலை, கொத்தமல்லி, புளியம்பூ, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து அதனுடன் ஒரு டீஸ்பூன் கடுகை வெறும் வாணலியில் வறுத்துச் சேர்த்து அரைத்தெடுக்க வேண்டும்.

SCROLL FOR NEXT