என்னென்ன தேவை?
சாமை சாதம் – 1 கப்
வெந்தயப் பொடி - அரை டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.
வறுத்து அரைக்க:
உளுந்து, கடலைப் பருப்பு, துவரம் பருப்பு - தலா கால் டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 7
தேங்காய்த் துருவல் - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
தாளிக்க
கடுகு - கால் டீஸ்பூன்
உளுந்து, கடலைப் பருப்பு - தலா அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
வெந்தயத்தை முளைக்கட்டி, காயவைத்து அரைத்துக் கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைப் போட்டுத் தாளியுங்கள். சாதம், அரைத்த பொடி, வெந்தயப் பொடி, மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்துக் கிளறி இறக்கிவையுங்கள்.
மலக்சிக்கல், நீரிழிவு, வயிற்றுப் புண், வாய் துர்நாற்றம் உட்பட பல பிரச்சினைகளை இந்த வெந்தய சாதம் மட்டுப்படுத்தும்.
ராஜபுஷ்பா