சமையலறை

தலைவாழை: சிறுதானிய மாங்காய் தோசை

செய்திப்பிரிவு

தொகுப்பு: எஸ்.கே.ரமேஷ்

மயக்கும் மாங்காய் சமையல்

மாங்காய்க்கு மயங்காதோர் உண்டோ! சேலம் என்றவுடனேயே நினைவுக்கு வருவது ருசியான மாம்பழம்தான். உணவில் மாங்காய், மாழ்பழத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் சேலத்துக்காரர்கள். மாங்காய், மாம்பழத்தில் செய்யக்கூடிய சில உணவு வகைகளைச் செய்யக் கற்றுத் தருகிறார் கிருஷ்ணகிரி மேகலசின்னம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜி. ஜெயலட்சுமி.

சிறுதானிய மாங்காய் தோசை

என்னென்ன தேவை?

மாங்காய் - 1, தினை அரிசி - 1 டம்ளர், பச்சரிசி - ஒன்றரை டம்ளர்,
உளுந்து - அரை டம்ளர், கொத்தமல்லி, பச்சை மிளகாய், கடுகு, கறிவேப்பிலை, எண்ணெய், சீரகம், உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது ?

தினை அரிசி, பச்சரிசி, உளுந்து மூன்றையும் ஒன்றாக அரைமணி நேரம் ஊற வையுங்கள். பிறகு மிக்சியில் அரைத்துக்கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, சீரகம், பச்சை மிளகாய் போட்டுத் தாளித்து, அதனை அரைத்து வைத்துள்ள மாவுடன் கலந்துகொள்ளுங்கள்.

இந்த மாவுடன் மாங்காய்த் துருவல், மல்லித்தழை, உப்பு சேர்த்துக் கலந்துகொள்ளுங்கள். தவாவில் தோசைகளாகச் சுட்டு எடுத்துப் பரிமாறுங்கள்.

SCROLL FOR NEXT