சமையலறை

தலைவாழை: மாங்காய் அப்பளம்

செய்திப்பிரிவு

தொகுப்பு: எஸ்.கே.ரமேஷ்

மயக்கும் மாங்காய் சமையல்

மாங்காய்க்கு மயங்காதோர் உண்டோ! சேலம் என்றவுடனேயே நினைவுக்கு வருவது ருசியான மாம்பழம்தான். உணவில் மாங்காய், மாழ்பழத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் சேலத்துக்காரர்கள். மாங்காய், மாம்பழத்தில் செய்யக்கூடிய சில உணவு வகைகளைச் செய்யக் கற்றுத் தருகிறார் கிருஷ்ணகிரி மேகலசின்னம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜி. ஜெயலட்சுமி.

மாங்காய் அப்பளம்

என்னென்ன தேவை?

மாங்காய் - 2, சீரகம் - 1 டீஸ்பூன், மிளகு - 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

மாங்காய்களைத் தோல் சீவி, சிறு துண்டுகளாக வெட்டி, தண்ணீர் சேர்க்காமல் மிக்சியில் அரைத்துக்கொள்ளுங்கள். வாணலியில் சீரகம், மிளகை வறுத்து, ஆறியதும் மிக்சியில் பொடித்துக்கொள்ளுங்கள். அரைத்த மாங்காய்க் கூழுடன் மிளகு, சீரகத் தூளைச் சேருங்கள்.

இந்தக் கலவையை ஒரு ஸ்பூன் மூலம் சிறிய வட்டங்களாகத் துணியில் ஊற்றி, மூன்று நாட்கள் வெயிலில் காயவையுங்கள். அப்பளம் போல் காய்ந்த பிறகு, எண்ணெய்யில் பொரித்து, பரிமாறுங்கள். இந்த மாங்காய் அப்பளம் ஆறு மாதங்கள் வரை கெடாது.

SCROLL FOR NEXT