சமையலறை

தினை சர்க்கரை சாதம்

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

தினை, பாசிப்பருப்பு - அரை கப்

வெல்லம் - 1 கப்

நெய் - 4 டீஸ்பூன்

முந்திரி - 8

திராட்சை - 10

ஏலக்காய்த் தூள் - கால் டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

தினை, பாசிப்பருப்பு இரண்டையும் தனித் தனியாக வறுத்துக் கொள்ளுங்கள். அவற்றுடன் இரண்டேகால் கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் குழைய வேகவைத்துக் கொள்ளுங்கள். வெல்லத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து சூடாக்கி, வடிகட்டி வெந்த சாதத்துடன் சேர்த்துக் கிளறுங்கள். இதை அடுப்பில் வைத்து நன்றாக கிளறி, அதனுடன் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, நெய், ஏலக்காய் சேர்த்து சுருள கிளறி இறக்கிவிடுங்கள்.

நார் சத்து நிறைந்த இந்த இனிப்பு, கொழுப்பைச் சேர விடாது. பசியைத் தூண்டும். ரத்த அழுத்தம், சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்கும்.

ராஜபுஷ்பா

SCROLL FOR NEXT