என்னென்ன தேவை?
கோதுமை மாவு - 2 கப்
உருளைக்கிழங்கு - 2
பெரிய வெங்காயம் - 2
மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் - தலா 1 டீஸ்பூன்
கரம் மசாலா, சீரகத் தூள் - தலா அரை டீஸ்பூன்
உப்பு, எண்ணெய், நெய் - தேவையான அளவு.
எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன்
மல்லித்தழை - சிறிதளவு
எப்படிச் செய்வது?
கோதுமை மாவில் தேவையான உப்பு, சிறிதளவு எண்ணெய் சேர்த்துத் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்துகொள்ளுங்கள். வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் வெங்காயம், மிளகாய் இரண்டையும் சேர்த்து வதக்குங்கள். அதில் வேகவைத்து மசித்த உருளைக் கிழங்கு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், கரம் மசாலா, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள். கடைசியில் எலுமிச்சைச் சாறு சேர்த்து மல்லித்தழையைத் தூவி இறக்குங்கள். பிசைந்துவைத்த மாவில் சிறிது எடுத்து வட்டமாகத் தேய்த்து, நடுவே மசாலா கலவையை வைத்து மூடி சப்பாத்தியாக இடுங்கள். அதைத் தோசைக்கல்லில் போட்டு நெய் விட்டுச் சுட்டெடுங்கள்.