சமையலறை

மரபு விருந்து: முல்லன் கைமா

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

முல்லன் கைமா அரிசி
- 500 கிராம்
சின்ன வெங்காயம்
- 100 கிராம்
கேரட் - 1 (சிறியது)
செலரி - சிறிதளவு
பொடியாக நறுக்கிய பூண்டு - 1 மேசைக்கரண்டி
ஓமம் - அரைத் தேக்கரண்டி
கிரீம் - 2 லிட்டர்
வெண்ணெய் - 100 கிராம்
உப்பு - தேவைக்கு ஏற்ப

எப்படிச் செய்வது?

அரிசியுடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வேகவைத்துக் கொள்ளுங்கள். வாய் அகன்ற பாத்திரத்தில் வெண்ணெய்யை இட்டுச் சூடானதும் பூண்டு, ஓமம் இரண்டையும் சேர்த்து வதக்குங்கள். பொடியாக நறுக்கிய கேரட்டையும் செலரியையும் அதில் சேர்த்து வேகும்வரை வதக்குங்கள். கிரீமைச் சேர்த்து மிதமான தீயில் ஐந்து நிமிடம் கொதிக்கவிடுங்கள். வேகவைத்த அரிசி - வெங்காயக் கலவையை இதில் சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு நன்றாகக் கிளறி, சூடாகப் பரிமாறுங்கள்.

SCROLL FOR NEXT