சமையலறை

ஆமை வடை

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

உடைத்த கறுப்பு உளுந்து, கடலைப் பருப்பு – தலா அரை கப்

காய்ந்த மிளகாய் – 5

மிளகு – அரை டீஸ்பூன்

பெருங்காயம் - கால் டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

கடலைப் பருப்பையும் உளுந்தையும் அரை மணி நேரம் ஊறவையுங்கள். பருப்புடன் காய்ந்த மிளகாய், மிளகு, கறிவேப்பிலை சேர்த்துக் கரகரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த மாவுடன் உப்பு, பெருங்காயம் சேர்த்து பிசைந்துகொள்ளுங்கள்.

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வடைகளாகத் தட்டிப் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுங்கள்.

ராஜபுஷ்பா

SCROLL FOR NEXT