சமையலறை

பல்சுவை பருப்பு சமையல்: முப்பருப்பு சப்ஜி

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, கடலைப் பருப்பு - தலா 50 கிராம், மஞ்சள் பொடி - அரை டீஸ்பூன், துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன், இடித்த பூண்டு - 2 பல், நறுக்கிய பச்சை மிளகாய் - 2, தக்காளி, வெங்காயம் - தலா 1, குடைமிளகாய், கேரட், சுரைக்காய், புடலங்காய், உருளைக் கிழங்கு (அனைத்தும் சேர்த்து நறுக்கியது) - 2 கப், தனியாப் பொடி, மிளகாய்ப் பொடி, சீரகப் பொடி மூன்று சேர்ந்து - 2 டீஸ்பூன், நெய் - 3 டீஸ்பூன், சோம்பு - அரை டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், மல்லித்தழை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

பருப்பு வகைகளுடன் மஞ்சள் பொடி, உப்பு, இடித்த பூண்டு, துருவிய இஞ்சி, அரை டீஸ்பூன் நெய் ஆகியவற்றைச் சேர்த்து குக்கரில் குழைய வேகவைத்து மசித்துக்கொள்ளுங்கள். மீதியிருக்கும் நெய்யை வாணலியில் ஊற்றிச் சூடாக்கி, சோம்பு, கடுகு இரண்டையும் போட்டுத் தாளியுங்கள். பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி பிறகு தக்காளியைச் சேர்த்து வதக்குங்கள். இரண்டும் நன்றாக வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள காய்கறிகள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி மசாலாப் பொடிகளைச் சேர்த்துக் கிளறுங்கள். காய்கறிகள் நன்றாக வதங்கியதும் பருப்புக் கலவையைச் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். மல்லித்தழையைத் தூவிப் பரிமாறுங்கள்.


குறிப்பு: லட்சுமி சீனிவாசன் | தொகுப்பு: ப்ரதிமா

SCROLL FOR NEXT