சமையலறை

பல்சுவை பருப்பு சமையல்: உளுந்து லட்டு

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

உளுந்து மாவு, (சிவக்க வறுத்து பொடியாக அரைத்தது) - 200 கிராம், நாட்டுச் சர்க்கரை - 150 கிராம், ஏலப்பொடி - ஒரு சிட்டிகை, முந்திரி-பாதாம் - 10, நெய் - 200 கிராம்

எப்படிச் செய்வது?

பெரிய பாத்திரத்தில் உளுந்து மாவு, நாட்டுச் சர்க்கரை, ஏலப்பொடி, ஒன்றிரண்டாக உடைத்த முந்திரி, பாதாம் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளுங்கள். உருக்கிய சூடான நெய்யை இதில் ஊற்றிச் சிறு சிறு உருண்டைகளாகப் பிடியுங்கள். நாட்டுச் சர்க்கரைக்குப் பதிலாகப் பனை வெல்லத்தைச் சேர்த்தும் செய்யலாம். வேர்க்கடலையை வறுத்துப் பொடித்துச் சேர்த்தால் சுவை கூடும். குழந்தைகளுக்காகச் சிறிது டூட்டி ஃபுரூட்டியும் சேர்த்து லட்டு பிடிக்கலாம்.


குறிப்பு: லட்சுமி சீனிவாசன் | தொகுப்பு: ப்ரதிமா

SCROLL FOR NEXT