சமையலறை

பல்சுவை பருப்பு சமையல்: கடலைப் பருப்பு சட்னி

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

கடலைப் பருப்பு - 50 கிராம், காய்ந்த மிளகாய் - 8 முதல் 10, பெருங்காயம் - சிறு துண்டு, புளி - சிறிய நெல்லிக்காய் அளவு, தேங்காய்த் துருவல் - கால் மூடி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

வாணலியில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடலைப் பருப்பு, பெருங்காயம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றைப் போட்டு நன்றாகச் சிவக்க வறுத்துக்கொள்ளுங்கள். ஆறியதும் அவற்றுடன் புளியையும் தேங்காய்த் துருவலையும் சேர்த்து, தேவையான உப்பு போட்டு அரைத்தெடுங்கள். இதைத் துவையல் போல கெட்டியாகவும் வைத்துக்கொள்ளலாம் அல்லது சிறிது நீர் சேர்த்து சட்னியாகவும் சாப்பிடலாம்.


குறிப்பு: லட்சுமி சீனிவாசன் | தொகுப்பு: ப்ரதிமா

SCROLL FOR NEXT