சமையலறை

சுவை நிறைந்த சிறுதானிய சமையல்: சிறுதானிய  போண்டா

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

கேழ்வரகு மாவு, கோதுமை மாவு, கடலை மாவு - தலா 100 கிராம், சோள மாவு, தினை மாவு - தலா 50 கிராம், வரகரிசி மாவு - 200 கிராம், புதினா - 2 டேபிள் ஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் - 3, பொடியாக நறுக்கிய மல்லித்தழை - கால் கப், சீரகம், சோம்பு - 1 டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு, பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை, பெரிய வெங்காயம் - 1, உப்பு – தேவைக்கு

எப்படிச் செய்வது?

ஒரு அகலமான பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, கடலை மாவு, சோள மாவு, தினை மாவு, வரகரிசி, கோதுமை மாவு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளுங்கள். அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, புதினா, மல்லித்தழை, பெருங்காயத் தூள், சீரகம், சோம்பு, உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்துகொள்ளுங்கள். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மாவை ஓரளவு கெட்டியாகக் கரைத்துக்கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும் மாவைச் சிறு சிறு உருண்டைகளாகப் போட்டுப் பொன்னிறமாகச் சுட்டெடுங்கள்.

SCROLL FOR NEXT