என்னென்ன தேவை?
வரகரிசி - 50 கிராம், தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன், சோளமாவு - 50 கிராம், நெய் - ஒன்றரை டேபிள் ஸ்பூன், ஏலக்காய் - 2, பால் - 300 மி.லி, பொடித்த வெல்லம் - தேவையான அளவு, முந்திரி - 5
எப்படிச் செய்வது?
வரகரிசியையும் சோளமாவையும் லேசாக வறுத்துக்கொள்ளுங்கள். வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யைச் சேர்த்துத் துருவிய தேங்காயைப் போட்டு வறுத்துக்கொள்ளுங்கள். வறுத்தவற்றை அதனுடன் சேர்த்துக் கலந்துகொள்ளுங்கள். கலவை ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் உதிரியாக இருக்க வேண்டும். இப்போது பாலை ஊற்றி மிதமான சூட்டில் கலவையைக் கொதிக்கவிடுங்கள். நன்றாகக் கொதித்ததும் பொடித்த வெல்லத்தைச் சேருங்கள். மீதமுள்ள நெய்யில் பொடித்த ஏலக்காய், முந்திரி சேர்த்து வறுத்துப் பாயசத்தில் கொட்டி இறக்குங்கள்.