சமையலறை

உளுந்து சாதம்

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

சாமை சாதம் – 1 கப்

முழு உளுந்து – 2 டீஸ்பூன் (வறுத்து, அரைக்கவும்)

உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு

வறுத்து அரைக்க

காய்ந்த மிளகாய் - 7

தேங்காய்த் துருவல் - 2டீஸ்பூன்

பெருங்காயம், கறிவேப்பிலை -சிறிதளவு

தாளிக்க

கடுகு - கால் டீஸ்பூன்

உளுந்து, கடலைப் பருப்பு - தலா அரை டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

எப்படிச் செய்வது?

வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைச் சேர்த்துத் தாளிக்க வேண்டும். அரைத்து வைத்திருக்கும் உளுந்து மாவைச் சேர்த்து கிளறி, அரைத்து வைத்திருக்கும் பொடியைச் சேர்க்கவும். அதனுடன் சாதம், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும். இந்த உளுந்து சாதம், உடல் சூட்டைத் தணிக்கும். எலும்பு, தசை, நரம்புகளுக்கு வலிமையைக் கொடுக்கும்.

ராஜபுஷ்பா

SCROLL FOR NEXT