என்னென்ன தேவை?
கோதுமை சம்பா ரவை – 200 கிராம், பாசிப் பருப்பு – 50 கிராம், வெங்காயம், தக்காளி, கேரட், பீன்ஸ் – தலா 1, துருவிய இஞ்சி – சிறிதளவு, கறிவேப்பிலை – சிறிது, நெய் – 4 டீஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலக்காய் – தலா 1, பச்சை மிளகாய் – 3, மஞ்சள் பொடி, பெருங்காயம் – ஒரு சிட்டிகை, உப்பு – தேவைக்கு, பச்சைப் பட்டானி – 1 கைப்பிடி
எப்படிச் செய்வது?
குக்கரில் இரண்டு டீஸ்பூன் நெய்விட்டு வாசனைப் பொருட்களைப் போட்டு தாளித்துக்கொள்ளுங்கள். அதில் பொடியாக அரிந்து வைத்துள்ள வெங்காயம், இஞ்சித் துருவல், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள். காய்கறிகளையும் சேர்த்து வதக்கி, சம்பா கோதுமை, பாசிப் பருப்பு இரண்டையும் சேருங்கள். ஒரு கப் அளவுக்கு மூன்று கப் தண்ணீர் சேர்த்துக்கொள்ளுங்கள். தண்ணீர் ஊற்றியதும் மஞ்சள் தூள், பெருங்காயப் பொடியைச் சேர்த்துத் தேவையான அளவு உப்பு போடுங்கள். கோதுமை நன்றாகக் கொதிக்கும்போது குக்கரை மூடி மூன்று விசில்விட்டு இறக்கிவிடுங்கள். இறுதியாக இரண்டு டீஸ்பூன் நெய் விட்டு, கொத்தமல்லித் தழையைத் தூவிப் பரிமாறுங்கள்.