என்னென்ன தேவை?
கோதுமை மாவு – 2 கப், உளுந்து – 2 டீஸ்பூன், அரிசி மாவு – 1 டீஸ்பூன், வெண்ணெய் – 2 டீஸ்பூன், பூண்டு – 2 பல், காய்ந்த மிளகாய் – 5, உப்பு – தேவைக்கு, பெருங்காயப் பொடி – ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை – சிறிதளவு, வறுத்த கறுப்பு, வெள்ளை எள் – 1 டீஸ்பூன், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு – தலா 1 டீஸ்பூன், சீரகம் – சிறிதளவு, தேங்காய் எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு
எப்படிச் செய்வது?
இரண்டு டீஸ்பூன் உளுத்தம் பருப்பை வறுத்து, மாவாகப் பொடித்துக் கொள்ளுங்கள். இதை அரிசி மாவுடன் கலந்துகொள்ளுங்கள். காய்ந்த மிளகாய், உப்பு, பெருங்காயம், பூண்டு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள். கடலைப் பருப்பையும் உளுத்தம் பருப்பையும் அரை மணிநேரம் ஊறவைத்துக்கொள்ளுங்கள். கோதுமை மாவை ஆவியில் வேகவைத்துக் கொள்ளுங்கள். வெந்த கோதுமை மாவுடன் அரிசி - உளுந்து மாவு, காய்ந்த மிளகாய் விழுது, பொடியாக அரிந்த கறிவேப்பிலை, சீரகம், ஊறவைத்த பருப்பு வகைகள், வெண்ணெய் ஆகியவற்றைச் சேர்த்து, கெட்டியாகப் பிசையுங்கள். கையில் எண்ணெய் தடவிக்கொண்டு இந்த மாவிலிருந்து சிறிது எடுத்து வட்டமாகத் தட்டி தேங்காய் எண்ணெய்யில் போட்டுச் சிவக்கப் பொரித்தெடுங்கள்.