படங்கள்: ஜான் விக்டர் 
சமையலறை

தலைவாழை: தயிர் ரசம்

செய்திப்பிரிவு

தொகுப்பு: ப்ரதிமாதினமும்

என்னென்ன தேவை?

தயிர் – 1 கப்
பொட்டுக்கடலை – 1 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் – தேவையான அளவு
தேங்காய்த் துருவல் – 3 டீஸ்பூன்
பூண்டுப் பற்கள் – 3
அரிந்த கறிவேப்பிலை, புதினா – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை

எப்படிச் செய்வது?

தயிரை நன்கு கடைந்துகொள்ளுங்கள். பொட்டுக்கடலை, மிளகாய்த்தூள், பூண்டு, தேங்காய்த் துருவல், மஞ்சள் தூள் ஆகியவற்றில் சிறிது நீர்விட்டு விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள். அரைத்த விழுதைக் கடைந்த தயிரில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் கறிவேப்பிலை, புதினா, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறுங்கள். இதைச் சோற்றில் பிசைந்தும் சாப்பிடலாம்.

SCROLL FOR NEXT