படங்கள்: பு.க.பிரவீன் 
சமையலறை

தலைவாழை: நவராத்திரி நல்விருந்து - காராமணி வடை

செய்திப்பிரிவு

சுதா செல்வகுமார்
தொகுப்பு: ப்ரதிமா

காராமணி வடை

என்னென்ன தேவை?
காராமணி – 1 கப்
இஞ்சித் துருவல் – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
சீரகம் – 1 டீஸ்பூன்
கிராம்பு – 1
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

காராமணியை எட்டு மணி நேரம் ஊறவையுங்கள். ஊறிய காராமணியுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள். இதனுடன் இஞ்சித் துருவல், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, சீரகம், இடித்த கிராம்பு ஆகியவற்றைச் சேர்த்துப் பிசையுங்கள். பிசைந்த மாவை வடையாகத் தட்டி எண்ணெய்யில் போட்டுப் பொரித்தெடுங்கள். பண்டிகை இல்லாத நாட்களில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்துச் செய்யலாம்.

SCROLL FOR NEXT