படங்கள்: பு.க.பிரவீன் 
சமையலறை

தலைவாழை: நவராத்திரி நல்விருந்து - சுகியன்

செய்திப்பிரிவு

சுதா செல்வகுமார்
தொகுப்பு: ப்ரதிமா

சுகியன்

என்னென்ன தேவை?

கடலைப் பருப்பு, பொடித்த
வெல்லம் – தலா அரை கப்
தேங்காய்த் துருவல் – அரை கப்
ஏலக்காய்ப் பொடி – 1 சிட்டிகை எண்ணெய் – தேவைக்கு
நெய் – சிறிதளவு
பச்சரிசி – 1 கப்
முழு உளுந்து – கால் கப்

எப்படிச் செய்வது?

அரிசியையும் உளுந்தையும் அரை மணிநேரம் ஊறவையுங்கள். கடலைப் பருப்பைக் கால் மணி நேரம் ஊறவைத்து, மெத்தென்று வேகவைத்துக்கொள்ளுங்கள். வெந்த கடலைப் பருப்பைத் தனியாக எடுத்து அதனுடன் தேங்காய்த் துருவல், வெல்லம், ஏலக்காய்ப் பொடி ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்றுவிட்டு எடுத்துக்கொள்ளுங்கள்.
வாணலியில் சிறிது நெய்விட்டுச் சூடானதும் இந்தப் பூரணத்தைப்போட்டுக் கெட்டியாகக் கிளறி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். ஊறிய பச்சரிசியையும் உளுந்தையும் சிறிது நீர்விட்டு அரைத்துக்கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடானதும் கடலைப் பருப்புப் பூரணத்தைச் சிறு உருண்டைகளாக உருட்டி மாவில் தோய்த்தெடுத்து எண்ணெய்யில் போட்டுப் பொன்னிறமாக வேகவைத்து எடுங்கள்.

SCROLL FOR NEXT