சுதா செல்வகுமார்
தொகுப்பு: ப்ரதிமா
பச்சைப் பயறு சுண்டல்
என்னென்ன தேவை?
பச்சைப் பயறு – 1 கப்
நாட்டுச் சர்க்கரை – அரை கப்
பனீர் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்
தேங்காய்த் துருவல் – கால் கப்
ஏலக்காய்ப் பொடி – 1 சிட்டிகை
திராட்சை, பேரீச்சை – 2 டேபிள் ஸ்பூன்
எப்படிச் செய்வது?
பச்சைப் பயறை மெத்தென்று வேகவையுங்கள். வாணலியில் நெய்விட்டுச் சூடானதும் உலர் பழங்கள், நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய்ப் பொடி, தேங்காய்த் துருவல், வேகவைத்த பயறு ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறுங்கள். பனீரை மேலே தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள்.