சுதா செல்வகுமார்
தொகுப்பு: ப்ரதிமா
ரங்கோலி சுண்டல்
என்னென்ன தேவை?
மொச்சை, சோயா, பட்டாணி, கொண்டைக்கடலை, காராமணி – 1 கப்
நறுக்கிய மாங்காய் – கால் கப்
கடுகு – 1 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
உடைத்த உளுந்து – 1 டீஸ்பூன்
கேரட் துருவல் – கால் கப்
கோதுமைப் பொரி – 2 டேபிள் ஸ்பூன்
அரைக்க
தேங்காய்த் துருவல் – கால் கப்
மல்லித்தழை – சிறிது
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – கால் அங்குலம்
சீரகம் – அரை டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
பயறு வகைகளை எட்டு மணிநேரம் ஊறவிட்டு நன்றாக வேக வைத்துக் கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடானதும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், கேரட் துருவல் ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை அரைத்து, இந்தக் கலவையில் சேர்த்து வதக்குங்கள். வேகவைத்த பயறு வகைகளை இதில் சேர்த்துத் தேவையான அளவு உப்பு, மாங்காய்த் துருவல் இரண்டையும் சேர்த்துக் கிளறுங்கள். கோதுமைப் பொரியைத் தூவிப் பரிமாறுங்கள்.