சுதா செல்வகுமார்
தொகுப்பு: ப்ரதிமா
கேரமல் சாஸ் பொங்கல்
என்னென்ன தேவை?
பச்சரிசி – 1 கப்
பாசிப்பருப்பு – கால் கப்
பால் – இரண்டரை கப்
கேரமல் சாஸ் சிரப் – 1 கப்
பட்டர் ஸ்காட்ச் சிப்ஸ் – 1 டேபிள் ஸ்பூன்
சாக்லேட் சிரப் – 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய்த் துருவல் – கால் கப்
நெய் – தேவைக்கு
எப்படிச் செய்வது?
பாசிப்பருப்பை மணக்க வறுத்தெடுத்துக்கொள்ளுங்கள். பச்சரிசியைக் கால் மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளுங்கள். ஊறிய அரிசியுடன் வறுத்த பாசிப்பருப்பையும் பாலையும் சேர்த்து (தேவையென்றால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ளுங்கள்) குக்கரில் குழைய வேகவைத்துக்கொள்ளுங்கள். வாணலியில் நெய்விட்டுச் சூடானதும் தேங்காய்த் துருவலைப் போட்டுப் பொன்னிறமாக வறுத்துக்கொள்ளுங்கள். வேகவைத்த பச்சரிசியில் கேரமல் சிரப் சேர்த்து நன்றாகக் கிளறி அடுப்பை அணைத்துவிடுங்கள். அதில் பட்டர் ஸ்காட்ச் சிப்ஸ், சாக்லேட் சிரப் இரண்டையும் ஊற்றி அலங்கரித்துப் பரிமாறுங்கள்.