என்னென்ன தேவை?
கேரட், உருளைக் கிழங்கு - தலா 2
முருங்கைக் காய், முள்ளங்கி - தலா 1
பீன்ஸ், சின்ன வெங்காயம் - தலா 10
துவரம் பருப்பு - 1 கப்
அரிசி - 2 கப்
பட்டை, கிராம்பு வறுத்துப் பொடித்தது- 2 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
அரிசியையும் துவரம் பருப்பையும் ஒன்றாகச் சேர்த்துக் குழைவாக வேகவிட்டு எடுங்கள். காய்கறிகளை நீளவாக்கில் பெரிய துண்டுகளாக நறுக்கிய, சாதத்தில் கொட்டி உப்பு, பட்டை, கிராம்புப் பொடி, மிளகாய்ப் பொடி ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி வேகவிடுங்கள். வெங்காயத்தை வதக்கிச் சேர்த்துக் கிளறி நன்றாகக் குழைந்ததும் இறக்கிவிடுங்கள். கறிவேப்பிலையை எண்ணெய்யில் போட்டுப் பொரித்து மேலே தூவிப் பரிமாறுங்கள்.
குறிப்பு: வரலட்சுமி முத்துசாமி | தொகுப்பு: ப்ரதிமா