சமையலறை

கலக்கலான கேரட் மேளா: ஸ்டஃப்டு தோசை

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

தோசை மாவு - 4 கப்
கேரட் துருவல், கோஸ் துருவல் - தலா அரை கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 கப்
மல்லித் தூள், மிளகாய்த் தூள் - தலா 1 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் வெங்காயத்தைச் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் நன்றாக வதங்கியதும் கேரட் துருவலையும் கோஸ் துருவலையும் சேர்த்துச் சிறிது வதக்கி அதில் மல்லித் தூள், மிளகாய்த் தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துச் சுருள வதக்குங்கள். தோசை மாவை மெல்லிய தோசையாக ஊற்றி அதன் மேல் இந்தக் கலவையை வைத்து மடித்து எடுத்துப் பரிமாறுங்கள்.

குறிப்பு: வரலட்சுமி முத்துசாமி | தொகுப்பு: ப்ரதிமா

SCROLL FOR NEXT