சமையலறை

கலக்கலான கேரட் மேளா: ஜோவா

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

கேரட் துருவல், சர்க்கரையில்லாத கோவா - தலா 1 கப்
வறுத்துப் பொடித்த வேர்க்கடலைப் பொடி - 1 கப்
சர்க்கரை - மூன்றரை கப்
ஏலக்காய்த் தூள் - 1 டீஸ்பூன்
நெய் - 1 கப்

எப்படிச் செய்வது?

துருவிய கேரட்டைச் சிறிது நெய் விட்டு வதக்கிக்கொள்ளுங்கள். அடி கனமான பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றிக் கம்பிப் பாகாகக் காய்ச்சிக்கொள்ளுங்கள். அதில் கோவா, வேர்க்கடலைப் பொடி, கேரட் துருவல், ஏலக்காய்த் தூள் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறுங்கள். நெய்யை ஊற்றிச் சுருளக் கிளறுங்கள். பாத்திரத்தில் ஒட்டாத பதத்தில் வந்ததும் நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரப்புங்கள். ஓரளவு ஆறியதும் துண்டுகள் போட்டுப் பரிமாறுங்கள்.

குறிப்பு: வரலட்சுமி முத்துசாமி | தொகுப்பு: ப்ரதிமா

SCROLL FOR NEXT