என்னென்ன தேவை?
கேரட் - 4
உருளைக் கிழங்கு - 2
பச்சைப் பட்டாணி - 4 டீஸ்பூன்
பிரெட் தூள் அல்லது ரஸ்க் - 2 கப்
மிளகாய்த் தூள், கரம் மசாலா
- தலா 2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
கேரட்டைப் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். உருளைக் கிழங்கைத் தோல் நீக்கிப் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். கேரட், உருளைக் கிழங்கைப் பச்சைப் பட்டாணியுடன் சேர்த்து வேகவைத்து மசித்துக்கொள்ளுங்கள். அதனுடன் உப்பு, கரம் மசாலா, மிளகாய்த் தூள், மல்லித் தழை ஆகியவற்றைச் சேர்த்துப் பிசையுங்கள். கலவையில் இருந்து சிறிது எடுத்து உள்ளங்கையில் வைத்து வட்டமாகத் தட்டி, பிரெட் தூளில் புரட்டியெடுத்துத் தோசைக்கல்லில் போட்டு வேகவிடுங்கள். சுற்றிலும் எண்ணெய் விட்டு, இரு புறங்களிலும் திருப்பிப் போட்டு வெந்ததும் எடுங்கள்.
குறிப்பு: வரலட்சுமி முத்துசாமி | தொகுப்பு: ப்ரதிமா