சமையலறை

கலக்கலான கேரட் மேளா: பஜ்ஜி

செய்திப்பிரிவு

கேரட்டைக் கண்டாலே காத தூரம் ஓடுவார்கள் குழந்தைகள் பலர். அதன் இனிப்புச் சுவையால் பெரியவர்களும் கேரட்டை அவ்வளவாக விரும்பமாட்டார்கள். கேரட்டில் பொரியல், அல்வா, கீர் போன்றவற்றைத் தவிர புதுமையாக எதையும் சமைக்காததும் கேரட்டை விருப்பப் பட்டியலில் இடம்பெற விடாமல் தடுக்கிறது. கேரட்டில் விதவிதமாகச் சமைத்து ‘கேரட் மேளா’வை நடத்தப் புதுவித சமையல் குறிப்புகளைத் தருகிறார் சென்னை கிழக்கு முகப்பேரைச் சேர்ந்த வரலட்சுமி முத்துசாமி.

பஜ்ஜி

என்னென்ன தேவை?

கேரட் - 4
கடலை மாவு - 2கப்
அரிசி மாவு - முக்கால் கப்
மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 2 சிட்டிகை
நெய் - 1 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

கேரட்டை மெல்லிய துண்டுகளாகச் சீவிக்கொள்ளுங்கள். கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த் தூள், உப்பு, பெருங்காயத் தூள், நெய் ஆகியவற்றைச் சேர்த்துத் தண்ணீர் ஊற்றி, பஜ்ஜி மாவு பதத்தில் கெட்டியாகக் கரைத்துக்கொள்ளுங்கள். நெய் பிடிக்காதவர்கள் 2 டீஸ்பூன் காய்ச்சிய எண்ணெய்யைச் சேர்த்துப் பிசையலாம். கேரட்டை இந்த மாவில் முக்கியெடுத்து எண்ணெய்யில் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுங்கள்.

குறிப்பு: வரலட்சுமி முத்துசாமி | தொகுப்பு: ப்ரதிமா

SCROLL FOR NEXT