சமையலறை

விநாயகர் சதுர்த்தி படையல்: பயறு தேங்காய்ப் பாயசம்

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

பச்சைப் பயறு – 1 கப்
துருவிய வெல்லம் – ஒன்றரை கப்
மெலிதாக நறுக்கிய தேங்காய் – 3 டேபிள் ஸ்பூன்
ஏலப்பொடி – 1 டீஸ்பூன்
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
உடைத்த முந்திரி – 2 டேபிள் ஸ்பூன்

எப்படிச் செய்வது?

வெறும் வாணலியில் பச்சைப் பயறை வறுத்து, தண்ணீர் ஊற்றி வேகவிடுங்கள். பயறு நெத்துப் பதமாக வெந்ததும் வெல்லத் துருவலைச் சேர்த்து இரண்டு கொதி விடுங்கள். வாணலியில் நெய்யை ஊற்றித் தேங்காய்க் கீற்றுகளையும் முந்திரித் துண்டுகளையும் போட்டு வறுத்துப் பாயசத்தில் சேர்த்து, ஏலப்பொடியைத் தூவி இறக்குங்கள்.

SCROLL FOR NEXT