சமையலறை

விநாயகர் சதுர்த்தி படையல்: உளுந்துக் கொழுக்கட்டை

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

வெள்ளை உளுந்து – 1 கப்
தேங்காய்த் துருவல் – அரை கப்
காய்ந்த மிளகாய் – 3
எண்ணெய் – 2 டீஸ்பூன்
பெருங்காயம், கடுகு – தலா அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை, உப்பு – சிறிதளவு
கொழுக்கட்டை மாவு – 1 கப்
நல்லெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

எப்படிச் செய்வது?

உளுந்தை அரை மணி நேரம் ஊறவைத்து, தண்ணீரை வடிகட்டுங்கள். அதனுடன் உப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து மிக்ஸியில் போட்டுக் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள். வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டுத் தாளியுங்கள். அதில் தேங்காய்த் துருவலைச் சேர்த்து வதக்கிப் பின் அரைத்த உளுந்துக் கலவையைச் சேர்த்துக் கிளறுங்கள். எல்லாம் சேர்ந்து வந்ததும் இறக்கிவிடுங்கள்.

ஒரு பாத்திரத்தில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி அதில் உப்பு, நல்லெண்ணெய் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். கொழுக்கட்டை மாவை அதில் கொட்டி, கட்டியில்லாமல் கிளறுங்கள். மாவு நன்றாக வெந்ததும் இறக்கிவைத்து, சிறு சிறு உருண்டைகளாகப் பிடியுங்கள். நடுவில் உளுந்து பூரணத்தை வைத்து மூடி, ஆவியில் வேகவைத்து எடுங்கள்.

SCROLL FOR NEXT