தொகுப்பு : நிஷா
தலைவாழைஈடு இணையில்லா பக்ரீத் விருந்து
அன்புக்கு மதங்கள் கிடையாது என்பது அறுசுவை உணவுக்கும் பொருந்தும். மதங்களைக் கடந்து மனிதர்களிடையே நட்புறவை மேம்படுத்துவதுதான் பண்டிகைகளின் நோக்கம். பண்டிகைகள் அன்று நம் வீட்டில் விதவிதமாகச் சமைத்து ருசிப்பதுடன் அதை நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தந்து மகிழ்வது அலாதியானது. பக்ரீத் அன்று செய்யக்கூடிய உணவு வகைகள் சிலவற்றைச் சமைக்கக் கற்றுத்தருகிறார் சென்னையைச் சேர்ந்த ரஷிதா. அவற்றைச் சமைத்து, ருசித்து மகிழ்வோம்.
மட்டன் சுக்கா
என்னென்ன தேவை?
மட்டன் (பொடியாக நறுக்கியது)
– 1 கிலோ
பட்டை – 1
ஏலக்காய் – 5
கிராம்பு – 4
சோம்பு – அரை டீஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
எண்ணெய் – 100 மி.லி.
மிளகாய்த் தூள் – 100 கிராம்
மிளகுத் தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள் – 1 டீஸ்பூன்
தயிர் – 50 மி.லி.
கறிவேப்பிலை – ஒரு கொத்து
இஞ்சி-பூண்டு விழுது
– 4 டேபிள் ஸ்பூன்
எப்படிச் செய்வது?
கறியை நன்கு கழுவி மஞ்சள் தூளையும் தயிரையும் சேர்த்து அரை மணி நேரம் ஊறவிடுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும் சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றைச் சேர்த்துப் பொரியவிடுங்கள்.
ஊறவைத்துள்ள கறியை அதனுடன் சேர்த்து இஞ்சி-பூண்டு விழுதையும் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளுங்கள். கறி நன்கு வெந்தவுடன் மிளகாய்த் தூள், மிளகுத் தூள் இரண்டையும் சேர்த்துக் கிளறிவிடுங்கள். மிளகாய்த் தூள் வாசனை போனவுடன் கறிவேப்பிலையைத் தூவி இறக்குங்கள்.