சமையலறை

இனிப்பு ரொட்டி

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

கோதுமை மாவு 1 கப்

பால் கால் கப்

வாழைப்பழம் 2

பனை வெல்லம் கால் கப்

பசு நெய் தேவையான அளவு

எப்படிச் செய்வது?

பாலைக் காய்ச்சவும். ஆறியதும் அதனுடன் வாழைப் பழம், பனை வெல்லம் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். இதைக் கோதுமை மாவில் ஊற்றித் தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துப் பிசையவும். சிறிது நேரம் கழித்து, பிசைந்த மாவைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டிச் சப்பாத்திகளாகத் தேய்த்துச் சூடான தோசைக்கல்லில் போடவும். சுற்றிலும் நெய் விட்டு இருபுறமும் திருப்பிப் போட்டு எடுக்கவும்.

ராஜபுஷ்பம்

SCROLL FOR NEXT