என்னென்ன தேவை?
வரகரிசி மாவு - 1 கப்
துருவிய வெல்லம் - கால் கப்
தேங்காய் அரை மூடி
நெய் -1 டீஸ்பூன்
ஏலக்காய் சிறிதளவு
நெல்லிக்காய் 3
மஞ்சள் தூள் அரை டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
தாளிக்க:
கடலைப் பருப்பு -1 டீஸ்பூன்
கடுகு, உளுந்து -1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
எண்ணெய் - தேவையான அளவு
கறிவேப்பிலை, மல்லித்தழை சிறிதளவு
எப்படிச் செய்வது?
வரகரிசியை அலசிக் காயவைக்கவும். காய்ந்ததும் வறுத்து, மாவாக அரைக்கவும். தண்ணீரைக் கொதிக்கவைக்கவும். அதில் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். கொதிக்கவைத்த தண்ணீரை வரகரிசி மாவில் சேர்த்து இடியாப்பப் பதத்துக்குப் பிசையவும். பிசைந்த மாவை இடியாப்ப அச்சில் போட்டுப் பிழிந்து, ஆவியில் வேகவைக்கவும். வெந்ததும் அதில் பாதி எடுத்து வெல்லம், தேங்காய் துருவல், ஏலக்காய், நெய் சேர்த்துக் கிளறினால் இனிப்பு இடியாப்பம் தயார்.
வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும். நெல்லிக்காயைச் சாறெடுத்து, அதைத் தாளிப்பில் ஊற்றவும். பிறகு மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து, மீதியிருக்கும் இடியாப்பத்தைச் சேர்த்துக் கிளறி இறக்கவும். கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்தால் கார இடியாப்பம் தயார். சுடச்சுடச் சாப்பிட அருமையாக இருக்கும். இதே போலத் தினை, சாமை, குதிரைவாலி, பனி வரகு இவற்றிலும் செய்யலாம்.
ராஜபுஷ்பம்